லட்சுமியிடம் கண்ணம்மாவை பற்றி விசாரிக்கும் பாரதி – உண்மையை சொல்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று சௌந்தர்யா கேட்க்கொண்டதன் பெயரில் கண்ணம்மா ஹேமாவிற்கும் சமைத்து கொடுக்க ஒத்துக்கொள்கிறார். அதே போல் தனது அம்மா குறித்து பாரதியிடம் பொய் சொல்கிறார், லட்சுமி.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மா வேலை செய்வதை பார்த்து மிகவும் சங்கடம் அடைகிறார். அது குறித்து கண்ணம்மாவிடம் கேட்கவும் செய்கிறார். கண்ணம்மா தனக்கு இது பிரச்சனையே இல்லை என்றும் கூறி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், சௌந்தர்யா ஹேமாவிற்கு கண்ணம்மாவின் சமையல் மிகவும் பிடித்து இருப்பதாகவும், அவளுக்கு தொடர்ந்து சமையல் செய்து தர முடியுமா என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா முதலில் தயங்கினாலும், பின் சரி என்று கூறி விடுகிறார்.

இதனால் சௌந்தர்யா மிகவும் சந்தோசம் அடைந்து விடுகிறார். பின், சௌந்தர்யா கண்ணம்மாவின் நிலையை கூறி அகிலனிடம் புலம்புகிறார். அகிலன் அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை பேசுகிறார். பின், ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக பேசி கொண்டு வருகின்றனர்.

பின், ஹேமா லட்சுமியின் அம்மா குறித்து கேட்கிறார். அப்போது லட்சுமிக்கு கண்ணம்மா கூறியது நியாபகம் வருகிறது. கண்ணம்மா யாரிடமும் தன்னை பற்றி கூற கூடாது என்பது அவரது நினைவிற்கு வருகிறது. அந்த சமயம் பாரதியும் வந்து விடுகிறார். அவரும் லட்சுமியின் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.

அம்மா பெயர் குறித்து கேட்கிறார். முதலில், பெயரை சொல்ல தயங்கும் லட்சுமி பின், தனது அம்மாவின் பெயர் கண்மணி என்று கூறி விடுகிறார். இப்படியாக இருக்கும் போது கண்ணம்மாவும் வந்து விடுகிறார். பாரதி மற்றும் லட்சுமி இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டு ஆட்டோவில் மறைந்து உட்கார்ந்து விடுகிறார். ஆட்டோக்கார அண்ணனிடம் தான் வரவில்லை என்று லட்சுமியிடம் கூறி விடுவதாக சொல்ல சொல்கிறார்.

ஐஸ்வர்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் சேது – நொறுக்கி எடுக்கும் சிவா! பல சம்பவங்களுடன் “இதயத்தை திருடாதே”!!

பின், லட்சுமி ஆட்டோவில் வந்து பார்க்கும் போது கண்ணம்மா இருப்பதாய் பார்த்து ஷாக் ஆகுகிறார். தான் பாரதியிடம் பொய் சொல்லி விட்டதாக கூறி வருத்தமும் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here