ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்த ஷ்ரேயா சர்மாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜில்லுனு ஒரு காதல் ஷ்ரேயா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகியாக பலரும் கலக்கி வருகின்றனர். பேபி ஷாலினி, ஹன்சிகா, சிம்பு என சொல்லி கொண்டே செல்லலாம். அந்த வகையில் ஒருவர் தான் ஸ்ரேயா சர்மா. சிறு வயதில் இருந்தே பல விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர் தமிழில் சரளமாக பேசுவதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்தார். தமிழில் மெகா ஹிட் அடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக நடித்திருப்பார்.

அந்த வயதிலேயே தனது எதார்த்த நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். ஜில்லுனு ஒரு காதல் ஐஸு என்றால் தெரியாத ஆளே இல்லை. எந்திரன், நீதானே என் பொன்வசந்தம் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பாக்கியாவிற்காக இனியாவை ஸ்கூலில் சேர்க்க ஒத்துக்கொள்ளும் ஹெட் மாஸ்டர் – சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’ கதைக்களம்!!

தற்போது அவருக்கு 23 வயது ஆன நிலையில் நேற்று அவரது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன ஸ்ரேயாவை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here