கண்ணம்மாவை நினைத்து மோசமாகும் ஹேமாவின் உடல் நிலை – பரிதவிக்கும் பாரதி! சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவிற்கு உடல் நிலை மோசமாக இருக்க அதன் பழியை கண்ணம்மா மீது போடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் வருகிறது. லட்சுமி வந்து சமையல் அம்மா செய்த உணவை கொடுக்க அதன் பிறகு ஹேமா உடல் நலம் சரியில்லாமல் நடுக்கத்துடன் படுத்து இருக்கிறார். பாரதி டெஸ்ட் எடுத்து பார்க்க 102 டிகிரி காய்ச்சல் இருப்பதை பார்த்து ஷாக்காகிறார்.

பாரதி அவருக்கு தெரிந்த டாக்டரை அழைக்க அவர் ஹேமாவின் நிலை மோசமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். திடீரென ஹேமா சமையல் அம்மா புலம்புகிறார். அப்பொழுது அந்த டாக்டர் யார் சமையல் அம்மா என்று கேட்க அதற்கு சௌந்தர்யா நடந்தவற்றை சொல்கிறார்.

சமையல் அம்மாவிடம் இருந்து பிரிக்க தான் ஹேமாவை அமெரிக்காவிற்கு அழைத்து செல்கின்றார் என்றும் சொல்கிறார். இதனை கேட்டதும் டாக்டர் பிரியா ஷாக்காகிறார். என்ன நடக்குது இங்க என்று கேட்க கோவமடையும் பாரதி சௌந்தர்யா மற்றும் வேணுவை வெளியே போக சொல்கிறார்.

ஹேமா சமையல் அம்மா என்று புலம்பிக்கொண்டிருக்க டாக்டர் அவரை சமையல் அம்மாவுடன் அழைத்து செல்ல சொல்கிறார். ஆனால் இதையெல்லாம் கேட்கும் மனநிலையில் பாரதி இல்லை. வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சொல்லியும் பாரதி கேட்கவில்லை.

கடைசியாக அமெரிக்காவிற்கு சென்றே தீருவேன் என்று நிற்கிறார் பாரதி. அடுத்ததாக கண்ணம்மா வீட்டில் பாரதியை பற்றி யோசித்து கொண்டுள்ளார். பாரதி அமெரிக்கா செல்வது ஹேமாவிற்கும் நல்லது கிடையாது. தனக்கும் நல்லது கிடையாது என்று யோசிக்கிறார். நாளை காலை எப்படியும் பாரதியை தடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here