பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரியாகும் குக் வித் கோமாளி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் குக் வித் கோமாளி பிரபலம் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ஒற்றுமையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. சீரியல் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பிரபலமாகவே ஒளிபரப்பாகி வருகிறது.

மூர்த்தி வீட்டின் பொறுப்புகளை இத்தனை நாட்கள் சுமந்து தம்பிகளுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார். கடைக்குட்டி கண்ணன் மட்டும் தான் படித்து கொண்டுள்ளார்.

மூர்த்திக்கும் தனத்திற்கும் குழந்தை இல்லை என்று பலரும் கிண்டல் பேச்சு பேசிய நிலையில் இப்பொழுது தான் தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே சந்தோஷமான மனநிலையில் உள்ளது.

இந்நிலையில் தனத்திற்கு 8 மாதங்கள் நெருங்கிய நிலையில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதுவும் மண்டபத்தில் வைத்து இந்த விழாவை நடத்த உள்ளனர். அந்த மண்டபத்தில் தான் ஹேமா, சுஜிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். முக்கியமாக குக் வித் கோமாளி செஃப் தாமு இதில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here