‘பாரதி கண்ணம்மா’ அருண் குழந்தையில எப்படி இருக்காங்கனு பாருங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவி சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் மவுசு அதிகம் அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் பிரபலமாகி வருகிறது. தற்போது அதில் ஹீரோவாக நடிக்கும் அருண் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண் நடிப்பின் மீது உள்ள ஆசையால் சென்னைக்கு வந்தார். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு தான் ஷார்ட் பிலிமில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவருக்கு 30 வயது ஆகிறது. விஸ்காம் படிப்பை முடித்த அவருக்கு சினிமாத்துறை அவருக்கு கடினமாக இல்லை. ‘நிகழ்காலம்’ என்ற குறும்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு ‘மதி மயங்கினேன்’, ‘கள்ளன்’ போன்ற குறும்படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு ‘ஏனோ வானிலை மாறுதே’ என்ற குறும்படம் தான் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன் பிறகு ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

இத்தனை வருட போராட்டத்திற்கு பிறகு தான் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பல குறும்படங்கள் மூலம் அருண் ரசிகர்களை சேர்த்து வைத்திருந்ததால் பாரதி கண்ணம்மாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தோழியுடன் குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – அடி தூல் என பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

அதன் பிறகு பாரதி போல மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இவரின் நடிப்பு திறமை இருந்தது. ஆனால் வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்துள்ளனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

வெண்பா பேச்சை கேட்பதாலேயே ரசிகர்களுக்கு பாரதி மீது கோவம். ஆனாலும் தனிப்பட்ட முறையில் அருண் என்றால் அனைத்து ரசிகர்களுக்கும் இஷ்டம் தான். அப்படி இருக்க அவரது குழந்தை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வளவு கியூட்டாக உள்ள அவரை பார்த்த பலரும் புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here