தோழியுடன் குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – அடி தூல் என பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தனது தோழியுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரைகளில் மட்டும் தான் கூட்டு குடும்பம் என்ற கான்செப்ட்டில் படத்தை இயக்கி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது சின்னத்திரையிலும் உருவாக்க ஆரம்பித்து விட்டனர். பல சேனல்களில் ஆரம்பித்தாலும், விஜய் டிவி எப்பொழுதுமே ஸ்பெஷல் தான். எதை செய்தாலும் ஒரு மக்களை கவரும் விதத்தில் வித்தியாசமாகவே செய்வார்கள். அதனாலேயே விஜய் டிவிக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் மாறவே மாறாது.

மேலும் திறமை உள்ளவர்களை விஜய் டிவி தொடர்ந்து மேம்படுத்தி கொண்டு தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் காவியா. பாரதி கண்ணம்மா என்ற ஒரு சீரியலிலேயே மக்கள் மனதை வெகுவாக கொள்ளை கொண்டார். சின்னத்திரை நயன்தாரா என்றும் பெயர் வாங்கினார்.

மௌனராகம் 2 – சக்தியால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடும் வருண் – அப்போ சக்தி தான் வருணுக்கு ஜோடியா??

ஒரு சைடு கதாபாத்திரத்தில் நடித்து இந்த அளவிற்கு பெயர் வாங்க முடியும் என்றால் அது திறமையால் மட்டுமே கிடைக்க கூடியது. அதனாலேயே சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க தயங்க தைரியமாக வந்தார் காவியா. ஆரம்பத்தில் பல நெகடிவ் கமன்ட் இருந்து வந்தாலும், முல்லையாகவே காவியாவை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் பல போட்டோஷூட், டான்ஸ், ரீல்ஸ் என இன்ஸ்டாவில் கலக்கி வருகிறார். இந்நிலையில் ‘ஸ்டவ் மேல கடாய்’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு விடீயோவை வெளியிட்டுள்ளார். காவியாவுக்கு இப்படி ஒரு முகமா?? என ரசிகர்கள் ஆசிரியத்தில் உள்ளனர்.

அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here