சாதனை படைத்த ஷகிபுல் ஹசன் – இது நமக்கு கிடைக்காம போச்சே…, வருத்தத்தில் இலங்கை அணி.., நடந்தது என்ன?

0
சாதனை படைத்த ஷகிபுல் ஹசன் - இது நமக்கு கிடைக்காம போச்சே..., வருத்தத்தில் இலங்கை அணி வீரர்கள்.., நடந்தது என்ன?
சாதனை படைத்த ஷகிபுல் ஹசன் - இது நமக்கு கிடைக்காம போச்சே..., வருத்தத்தில் இலங்கை அணி வீரர்கள்.., நடந்தது என்ன?

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவினாலும், அந்த அணியில் உள்ள ஷகிபுல் ஹசன் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

மாஸ் காட்டிய வங்கதேச வீரர்கள்!

ஆசிய கோப்பை தொடருக்கான நேற்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்தனர். அதேபோன்று வெற்றிக்காக களமிறங்கிய இலங்கை அணி வீரர்களும் வங்கதேச அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்து வெற்றி பெற்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணி வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அதாவது வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் ஷகிபுல் ஹசன் மூன்றாவது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதன் மூலம் T20 கிரிக்கெட்டில் 600 ரன்கள் குவித்த மற்றும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை வங்கதேச அணி வீரர் நேற்றைய ஆட்டத்தில் படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதலிடத்தில் மேற்கிந்திய அணி வீரரான பிராவோ உள்ளார். ஷகிபுல் ஹசன் இன்னும் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் பிராவோவை அடுத்த இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இலங்கை அணி வீரர்கள் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் நம்மால் எதுவும் சாதனை படைக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here