குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்… திறந்த புத்தகமாக அவதாரம் எடுத்த பாக்கியலட்சுமி நேஹா!!!

0

மக்களுக்கு நன்கு பரிச்சயமான விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியவாக நடித்து வருபவர் நேஹா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் முதல்வன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

சன் டிவியின் 2012ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட பிள்ளை நிலா என்ற சீரியலில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் தமிழில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், நிறம் மாறாத பூக்கள், தமிழ் செல்வி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். எனினும் இவரை நன்கு அறிய வைத்தது வாணி ராணி என்ற ராதிகா அவர்களின் சீரியல் தான்.

மேலும் இவர் நடிகர் சத்யராஜ் அவர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் பேமஸ் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகள் இனியாவாக நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் மிக ஆக்ட்டிவாகவும் இருப்பவர். அதாவது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் இதனால் அவர் பல உருவ கேலிக்கு ஆளாகி உள்ளனர். இது பற்றி அவரே சமீபத்தில் வேதனையுடன் தெரிவித்து இருந்தார். இருப்பினும் அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஷேர் செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது நடிகர் அர்ஜுன் அவர்களின் முதல்வன் படத்தில் இடம் பெற்ற முதல்வனே என்ற பாடலின் வரிகளுக்கு புடவையில் ரீல்ஸ் செய்து அசத்தி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here