டாப் சீரியல் லிஸ்ட் – நூலிழையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை முந்திய பிரபல சீரியல்!!

0

சின்னத்திரையில் எப்பொழுதுமே விஜய் டிவிக்கு அதிக மவுசு இருக்க தான் செய்யும். அதிலும் சீரியலுக்கு சொல்லவே வேண்டாம். அந்த வகையில் விஜய் டிவியின் டாப் சீரியல் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டாப் சீரியல் லிஸ்ட்

விஜய் டிவி என்றாலே பல புதுமையான விஷயங்களை செயல்படுத்துவது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தான் அந்த சேனலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மற்ற சேனலை போல இல்லாமல் புது விதமாக யோசிப்பவர்களும் கூட. சூப்பர் சிங்கரில் ஆரம்பித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரை புதுமையான பல கான்செப்ட்களை ரசிகர்களுக்கு அளித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசொட் ப்ரோமா வீடியோ!!!

நிகழ்ச்சி ஒரு பக்கம் டாப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்க சீரியலுக்கு விஜய் டிவியில் பஞ்சம் கிடையாது. அனைத்து சேனல்களிலும் சீரியலின் TRP லிஸ்ட்டை வைத்து பார்த்தால் விஜய் டிவி சீரியல் தான் முன்னிலையில் இருக்கும். ஆரம்பித்த சில நாட்களிலேயே சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

விஜய் டிவி சீரியல் என்றாலே அது மாஸ் தான் என்று மக்கள் மனதிலும் பதிந்து விட்டது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, என சீரியல்கள் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் புதிதாக வேறு தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற புதிய சீரியல்களையும் விஜய் டிவி அறிமுகப்படுத்தியுள்ளது.

சீரியல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலமாக இருக்க புதிய சீரியலும் போட்டிக்கு வந்துள்ளது. இந்த வாரத்தில் அதிக ரேட்டிங் பெற்ற சீரியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வழக்கம் போல முதல் இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இடம் பெற்றுள்ளது.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் முறையே ராஜா ராணி, தமிழும் சரஸ்வதியும் சீரியல் பிடித்துள்ளது. புது சீரியல்களான தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு சீரியல்கள் 11 மற்றும் 13 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here