பாக்கியலட்சுமி சீரியல் இனியாவுக்கு தங்கச்சி பொறந்துருக்கா?? வைரலாகும் வீடியோ!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நடிகை நேஹாவுக்கு தங்கச்சி பாப்பா பொறந்துருக்காம். இந்த தகவலை நேஹா வீடியோவாக பதிவிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகை நேஹா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி குடும்பத்தின் மூன்றாவது வாரிசாக இனியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நேஹா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ தொடரிலும் நடித்து வருகிறார் நேஹா. ஏறக்குறைய எல்லா சீரியல்களிலும் சின்னப்பெண்ணாக நடித்து வரும் நேஹாவுக்கு 19 வயது. நடிகை நேஹா தற்போது விஜய் டிவியின் பிரபல சீரியல் பாக்கியலட்சுமியில் நடித்து வருகிறார்.

தோல்வி பயத்தால் தான் இந்த ஐடி ரைடு – அதிமுகவை வறுத்தெடுத்த துரைமுருகன்!!

இந்த தொடரின் மூலம் நேஹாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை நேஹாவுக்கு ஒரு தங்கை பிறந்துள்ளதாம். அதாவது அவரது அம்மாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த வகையில் அக்காவாகியிருக்கிறார் நேஹா. இந்த சந்தோசமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் நேஹா. நேஹாவின் இந்த வீடியோ பதிவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here