அனிதா சம்பத்துக்கு நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!!

0

பிக்பாஸ் அனிதா சம்பத்துக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்துள்ளது. அனிதா சம்பத்தின் முதலாவது திருமண நாள் அன்று அவருடைய நண்பர்களும் உறவினர்களும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் அனிதா

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஒரு காலத்தில் அனிதா சம்பத்துக்காக ஏங்கிய ரசிகர்களும் இருந்தனர். ரசிகர்களின் ஆதரவை சம்பாதித்த அனிதா சம்பத் தமிழ் திரைப்படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார். பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் அனிதா சம்பத்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவரை சுற்றி பல எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வந்தன. போகப்போக பிக்பாஸ் போட்டியில் இவர் காட்டிய ஈடுபாட்டினால் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டார் அனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னதாக அனிதா சம்பத்துக்கு திருமணமானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட திருமணம் முடிந்த கையோடு பிக்பாஸ் வந்ததாக சொல்லியிருப்பார் அனிதா.

பாக்கியலட்சுமி சீரியலின் நடிகர் கோபி இப்படி பட்டவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தனது நீண்ட கால நண்பரான பிரபா என்பவரை மணமுடித்துள்ள அனிதாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய முதல் திருமண நாளை கொண்டாடிய அனிதா வீடியோ ஒன்றை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த யூடியூப் வீடியோ பதிவில் அனிதாவின் திருமண நாளன்று அவரது நண்பர்களும் உறவினர்களும் இணைந்து அனிதா மற்றும் அவரது கணவர் பிரபாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ யூடியூபில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here