தர லோக்கல் கெட்டப்பில் களமிறங்கிய பாக்கியலட்சுமி எழில் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் எழில் இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பவர். தற்போது பிரபல நடிகரான நவரச நாயகன் கார்த்தி பாடலுக்கு வித்தியாசமான முறையில் ரீலிஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்யலக்ஷ்மி எழில்

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஷால். ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர் ஒரு பார்ட் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் மக்கள் மனதில் தடாலென இடம் பிடித்தவர் தான் விஷால்.

இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் என்றே சொல்லலாம். இன்ஸ்டாவிலும் எக்கச்சக்க பாலோவர்ஸ். இப்படி தன் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வந்தவர் தான் விஷால். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே அவ்ளளவு கஷ்டப்பட்டு இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

யாருக்குமே வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடாது அல்லவா?? அந்த வகையில் எழிலுக்கு விடா முயற்சியால் கிடைத்த வெற்றி தான் பாக்யலக்ஷ்மி. இவர் பொறியியல் படிப்பை முடித்து டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்தவர் விஷால்.

இன்ஸ்டாவிலும் நாளுக்கு நாள் இவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தற்போது அவர் கார்த்திக் நடித்த பாடல் ஒன்றுக்கு சோக்காக ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here