அவமானப்பட்டு ராதிகா கழுத்தில் தாலி கட்டும் கோபி.., பாக்யாவுக்கு உருவாகும் புதிய ஜோடி!!

0
அவமானப்பட்டு ராதிகா கழுத்தில் தாலி கட்டும் கோபி.., பாக்யாவுக்கு உருவாகும் புதிய ஜோடி!!
அவமானப்பட்டு ராதிகா கழுத்தில் தாலி கட்டும் கோபி.., பாக்யாவுக்கு உருவாகும் புதிய ஜோடி!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகாவின் திருமண சம்பிரதாயங்கள் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் பாக்கியா கோபியின் திருமணதிற்கு தான் சமைக்கிறோம் என்றே தெரியாமல் வேலை பார்த்து கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கோபி தனது அம்மாவையே திருமணத்திற்கு அழைக்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என்று திட்டுகிறார். மேலும் ராதிகாவிற்கு ஏற்கனவே பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. இந்த திருமணத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று ராதிகாவின் குடும்பம் கொஞ்சம் பயத்தில் தான் உள்ளனர்.

இப்பொழுது கோபி திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்று ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் புதிய அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது இந்த திருமணத்தில் பல தடங்கல்கள் வந்து கொண்டே தான் இருக்குமாம். அதிலும் ராதிகாவை பாக்கியாவின் குடும்பமே அசிங்கப்படுத்துமாம். அதையும் தாண்டி ராதிகா கழுத்தில் கோபி தாலி கட்டிவிடுவாராம். அதன் பிறகு தான் ராதிகா பாக்கியாவை தொடர்ந்து பழி வாங்கிக் கொண்டே தான் இருப்பாராம். மேலும் பாக்கியாவிற்கும் புதிய ஜோடியாக ஒருவர் களமிறங்குவாராம். இப்படி பல ட்விஸ்ட்டுகளுடன் Upcoming எபிசோடு காத்துக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here