மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இனி இவங்களுக்கும் ரூ.1000 கல்வி உதவித்தொகை! முதல்வர் உறுதி!!

0
மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் - இனி இவங்களுக்கும் ரூ.1000 கல்வி உதவித்தொகை! முதல்வர் உறுதி!!
மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் - இனி இவங்களுக்கும் ரூ.1000 கல்வி உதவித்தொகை! முதல்வர் உறுதி!!

மாநிலத்தில், ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு ரூ.150-ஆக இருந்த கல்வி உதவித்தொகை, ரூ.1000-ஆக உயர்த்தப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு :

புதுச்சேரி மாநிலத்தில், 9 அரசு மற்றும் 5 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 884 மாணவர்களுக்கு பட்டங்களை இன்று நடந்த அரசு விழாவில் மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், சுயதொழில் தொடங்க வங்கி கடன் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழிற்கல்வி படித்த மாணவர்கள் தாமாக முன்வந்து, வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை 150 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here