கோபிக்கு இப்படி ஒரு கேவலமான புத்தியா?? சீரழிய இருக்கும் இனியாவின் வாழ்க்கை.., பாக்கியா எடுத்த அதிரடி முடிவு!!

0
கோபிக்கு இப்படி ஒரு கேவலமான புத்தியா?? சீரழிய இருக்கும் இனியாவின் வாழ்க்கை.., பாக்கியா எடுத்த அதிரடி முடிவு!!
கோபிக்கு இப்படி ஒரு கேவலமான புத்தியா?? சீரழிய இருக்கும் இனியாவின் வாழ்க்கை.., பாக்கியா எடுத்த அதிரடி முடிவு!!

விஜய் டிவியில், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

கோபி-பாக்கியா விவகாரத்தை தொடர்ந்து, கோபி வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் வீட்டை பார்த்து கொள்ளும் முழு பொறுப்பும் பாக்யாவுக்கு வந்து விட்டது. இதனால் தன் சமையல் தொழிலில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதில் பாக்கியா உறுதியாக உள்ளார். மற்றொரு பக்கம் கோபி-ராதிகா திருமண ஏற்பாடு வெகு விமர்சியாக நடந்து வருகிறது. எதிர்பாராத விதமாக கோபி-ராதிகா திருமண கேட்டரிங் ஆர்டர் பாக்யாவுக்கு கிடைத்து உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கோபி, தனக்கும் ராதிகாவுக்கு திருமணம் நடக்க போவதாக, ஈஸ்வரியிடம் சொல்லி விடுகிறார். அதை கேட்டு ஈஸ்வரி கோபியை அறைந்து விட்டார். மேலும் ஈஸ்வரி, கோபி திருமணம் பற்றி கணவர் ராமமூர்த்தியிடம் தெரிவிக்கிறார். இதை கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ராமமூர்த்தி கோபியை கோவிலுக்கு வர சொல்லி சந்திக்கிறார்.அப்போது ராமமூர்த்தி, கோபியிடம் நீ ராதிகாவை திருமணம் செய்ய கூடாது.

என்ன யூஸ் பண்ணிகிட்டாங்க.., என்ன வச்சு பணம் பாக்குறாங்க.., கதறும் தயாரிப்பாளர் ரவீந்தர்!!

அது தப்பான முடிவு, உன் பொண்ணு இனியாவை யோசிச்சு பாரு என சொல்கிறார். அதை கேட்டு கோபி, இப்படி சென்டிமென்ட் டயலாக் என்கிட்ட பேசாதீங்க, நான் கண்டிப்பா ராதிகாவை திருமணம் செய்வேன் என சொல்லிவிட்டு கோபமாக சென்று விட்டார். இதையடுத்து ராமமூர்த்தி இந்த கல்யாணத்தை கண்டிப்பா, நாம நிறுத்தணும் என யோசிக்கிறார். மற்றொரு பக்கம், ராதிகா வீட்டில் அதிக சந்தோஷத்துடன் மண்டபத்திற்கு கிளம்புகின்றனர். மேலும் ராம மூர்த்தி இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன செய்ய போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ப்ரோமோ அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் பரவியது. இதிலிருந்தே கோபியின் கேவலமான எண்ணம் வெட்டவெளிச்சமாகிறது. அதாவது இனியா மீது உயிரையே வைத்திருப்பதாக சொல்லும் கோபி மகளை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. இதனால் பின்னாளில் இனியா வாழ்வில் வரும் பிரச்சனைகளை பற்றியும் கோபி யோசிக்கவே இல்லை. மேலும் ராதிகாவின் அம்மா வேறு இனியாவை கோபியிடம் இருந்து பிரிக்க திட்டம் போட்டு வருகிறார். இனி இந்த கதை எங்கு சென்று முடிவடைய போகிறதோ என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here