ச்சீ.., நீ இவ்வளவு மோசமானவளா.., உன்ன விட இனியா தான் முக்கியம்.., முட்டாள் தனத்தால் கோபியிடம் அசிங்கப்பட்ட ராதிகா!!!

0
ச்சீ.., நீ இவ்வளவு மோசமானவளா.., உன்ன விட இனியா தான் முக்கியம்.., முட்டாள் தனத்தால் கோபியிடம் அசிங்கப்பட்ட ராதிகா!!!
ச்சீ.., நீ இவ்வளவு மோசமானவளா.., உன்ன விட இனியா தான் முக்கியம்.., முட்டாள் தனத்தால் கோபியிடம் அசிங்கப்பட்ட ராதிகா!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் இனியா மேடையில் பேசிய வீடியோவை பார்த்து பெருமைப்படுகிறார். இது ராதிகாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்காததால் ஆத்திரத்தில் கோபியின் போனை உடைக்கிறார். இதனால் கோபம் அடைந்த கோபி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதனால இனியா என் பொண்ணு இல்லைன்னு ஆகிடாது என சண்டை போடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மறுநாள் இனியா ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளுக்காக காபி போட்டு கொடுக்கிறார். இதை பார்த்த பாக்கியா, செல்வி பிள்ளைகள் மேலையாச்சும் பாசம் இருக்கே என சந்தோசப்படுகிறார். பின் ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் கோபி, இனியா பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்பட அந்த நேரத்தில் ராதிகா வருகிறார். அவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்து ராதிகா கோபமாக உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி இனியாவிடம் கோபி உன்னிடம் தான் அதிகமாக பாசம் வச்சிருக்கான். இந்த பாசத்தை வச்சு நீ அவனை உன்னுடைய கண்ட்ரோல்ல வச்சுக்கோ என்கிறார். இதை கேட்டு இனியா குழப்பமடைய பாக்கியா அவருக்கு அட்வைஸ் செய்கிறார். பின் ரூமுக்கு வரும் கோபியிடம் ராதிகா நா கோபமாக இருக்கிறேன் என்று சொல்ல, அதுக்கு கோபி ஏன் போன உடச்சிட்டு நீ கோவமா இருக்கியா. நா தான் கோபமா இருக்கனும் என்று சத்தம் போடுகிறார்.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி., எங்கன்னு தெரியுமா?

இதுக்கு ராதிகா நீங்க என்னையும், மயூவையும் கண்டுக்க மாட்டேங்கறீங்க என சண்டை போட கோபி பதிலுக்கு சண்டை போடுகிறார். அதுக்கு ராதிகா நீங்க முன்ன மாதிரி இல்ல. என்னையும் மயூவையும் சீட் பண்றீங்க என்று சொல்ல கோபி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here