‘அம்மா சின்ன காயத்துக்கே அப்படி பண்ணாங்க, உங்களுக்கு இவ்வளோ பெருசா அடிபட்டிருக்கு’ – பாக்கியாவை மட்டம் தட்டும் செழியன், இனியா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு தோளில் அடிபட்டதை அடுத்து ஒட்டுமொத்த வீடே பதறுகிறது. மேலும் இனியா, செழியன் அனைவரும் அப்பாவிற்கு இப்படி ஆகிவிட்டதே என்று கண்கலங்குகின்றனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா மற்றும் ஜெனி இனியாவை அழைத்து செல்ல கோபி அதனை பார்த்து விடுகிறார். வேகமாக அங்கிருந்து செல்ல பாக்கியாவிற்கு கால் செய்து இனியாவை அழைத்து வரவா?? என்று நாடகமாடுகிறார். இது தெரியாமல் பாக்கியா தானே அழைத்து சென்று கொண்டிருப்பதாக சொல்கிறார்.

அடுத்ததாக காரில் வந்து கோபி அமர சட்டை அழுக்காக இருப்பதையும், அடிபட்டிருப்பதையும் பார்த்து ராதிகா பதறுகிறார். அதற்கு கோபி மயூ தான் இப்போ முக்கியம் அவளை பாரு, இது பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்கிறார். ராதிகாவும் மயூவை நினைத்து பயப்படுகிறார்.

நீங்க மட்டும் வரலைனா என்ன நடந்து இருக்குமோ?? என்று பதட்டமடைகிறார். அதற்கு கோபி தான் இருக்கும் வரைக்கும் எதுவுமே நடக்க விட மாட்டேன் என்று சொல்கிறார். மேலும் ராதிகா நீங்க எப்படி சரியா ஸ்கூல் விடுற நேரத்துல வந்திங்க என்று கேட்க மயூவை பார்க்கணும் போல இருந்ததாகவும், தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்வதற்காக வந்ததாகவும் பொய் சொல்கிறார்.

மேலும் மயூவையும் உன்னையும் விட்டு எப்பொழுதுமே விலக மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறார் கோபி. அடுத்ததாக கோபி வீட்டிற்கு செல்ல அனைவரும் என்ன ஆச்சு என்று கேட்கின்றனர். அப்பொழுது சட்டையில் கரை இருப்பதையும், அடிபட்டிருப்பதையும் பார்த்து அனைவருமே பதறுகின்றனர்.

மேலும் இனியா அப்பாவிற்கு என்ன ஆனதோ என்று அழுகிறார். ஒட்டுமொத்த வீடே அந்த சின்ன காயத்திற்கு பதறுகிறது. கோபியின் அப்பாவும் அம்மாவும் பாக்கியாவின் காலை பார்த்த பிறகும் வேலை வாங்குகின்றனர். தன்னை ஒரு கார்க்காரன் வந்து இடித்து விட்டதாக பொய் சொல்கிறார்.

செழியன் தனக்கு ஏன் கால் செய்யவில்லை, அம்மா சின்ன காயத்திற்கே என்ன கூப்பிட்டாங்க, நீங்க கூப்டுறதுக்கு என்ன? என்று கேட்கிறார். மேலும் ஈஸ்வரி ஆம்புலன்ஸை கூப்பிடும் படியும் படி சொல்கிறார்.

பாக்கியாவை சுடுதண்ணீர் வைத்து எடுத்து வர சொல்கின்றனர். நடக்க முடியாமல் பாக்கியா செல்ல அப்பொழுது ஜெனி வந்து செழியனை உதவிக்கு அழைக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here