என் விவாகரத்துக்கு ஷிவானி தான் காரணமா?? அசீம் ஓபன் டாக்!!

0

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அசீம் தனது மனைவியை சட்டபூர்வமாக பிரிந்தார். இவர்களது விவாகரத்துக்கு நடிகை ஷிவானி தான் காரணம் என்று கருத்துக்கள் எழுந்த நிலையில், நடிகர் அசீம் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகர் அசீம் விவாகரத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அசீம். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அசீமுக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘பகல் நிலவு’ தொடர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தொடரில் நடிகர் அஸீமுக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நடித்திருந்தார். இவர்கள் இருவரது ஜோடிக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி ஃபன் அன்லிமிடெட்’ என்ற நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கு பெற்றுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் ஆடியபோது இவர்கள் இருவரும் நிஜமான காதலர்களா என்று கேட்கும் அளவுக்கு இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள். இந்நிலையில் அஸீமும், ஷிவானியும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி சமூகவலைதளத்தில் பரவி வந்தது. ஆனால் இந்த செய்தி குறித்து இருவருமே எந்த தகவலும் பதிவு செய்யவில்லை.

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அசீம் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்துள்ளார். ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார்க்ள. இவர்களது விவாகரத்துக்கு நடிகை ஷிவானி தான் காரணம் என சமூகவலைதளத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது.

இது குறித்து நடிகர் அசீம் கூரும்போது, ‘சில தொடர்களில் நானும் ஷிவானியும் இணைத்து நடித்தோம். எங்களது நடிப்புக்கு பரிசாக ரொமான்டிக் ஜோடி என்ற பட்டம் கூட கிடைத்தது. உடனே நாங்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தது.

சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதனால் நான் ஷிவானியை திருமணம் செய்துகொள்ளபோவதாக சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இருவருக்கும் தொழில் ரீதியான தொடர்பை தவிர வேறு எதுவும் இல்லை. அந்த பெண்ணை நிம்மதியாக இருக்க விடுங்கள்’ என கூறியுள்ளார் அசீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here