ஜீ தமிழ் சீரியலில் கமிட்டான விஜய் டிவி நடிகர் – அதுவும் இந்த சீரியலிலா??

0

ஜீ தமிழில் தற்போது யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. அதில் விஜய் டிவி நடிகர் களமிறங்கவுள்ளார்.

நினைத்தாலே இனிக்கும்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ஆயுத எழுத்து. இந்த சீரியல் தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. இந்த சீரியல் ஆரம்பத்தில் ஸ்ரீத்து மற்றும் அம்சத் கான் நடித்து வந்தனர்.

அதன் பிறகு அதிரடியாக இருவருமே அந்த சீரியலை விட்டு விலகினர். அதற்கு பதிலாக தான் சரண்யா துராடி மற்றும் ஆனந்த் செல்வன் நடிக்க கமிட்டாகினர். அதன் பிறகு தான் சீரியல் மந்தமாக ஆரம்பித்தது. இதனால் சீரியலை விரைவில் முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

Ayuthaezhuthutvseries
Ayuthaezhuthutvseries

இந்நிலையில் இந்த சீரியல் நடிகரான ஆனந்த் செல்வன் கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியலும் முடிவடைந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த சீரியலில் சன் டிவி பிரபலங்களும் நடிக்கவுள்ளனர். அதாவது நாயகி சீரியல் வில்லனான கலிவரதன் மற்றும் கல்யாணவீடு சீரியல் வில்லி கலா போன்றோரும் நடிக்கவுள்ளனர். அந்த ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here