பாக்கியாவும் ராதிகாவும் சேர்ந்து என்னமா லூட்டி அடிக்கிறாங்க… இனி கோபி பாடு திண்டாட்டம் தான்!!!

0

விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் நடிகை சுசித்ரா, பாக்கியா என்ற கதாபாத்திரத்திலும் நடிகை ரேஷ்மா, ராதிகா என்ற கதாபத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு இந்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சுசித்ரா வெளியிட்டு உள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு இல்லத்தரசியின் கஷ்டங்கள், வேதனைகள், லட்சியங்களை மையமாக கொண்டது. அதாவது, இதில் வரும் பாக்கியா என்ற கதாபாத்திரமே இந்த கதையின் நாயகி. மிக குறைந்த அளவு படிப்பறிவு கொண்ட இவரை இவரின் மாமியார், கணவர் கோபி, மூத்த மகன் செழியன்  மற்றும் மகள் இனியா உள்ளிட்டோர் ஏளனம் செய்கின்றனர். இந்த அவமானங்களை தாங்கி கொண்டு தனக்கென ஒரு மரியாதையை உருவாக்க போராடும் ஒரு பெண்ணாக பாக்கியா  நடித்து வருகிறார்.

அவருக்கு உதவியாக இளைய மகன் எழில், மாமனார் மற்றும் இவரின் உற்ற தோழியாக இருக்கும் கோபியின் முன்னாள் காதலி ராதிகா போன்றோர் உள்ளனர். இப்படி தன்னுடைய சுய மரியாதைக்காக போராடும் பெண்ணின்  கதையை மையமாக வைத்து சீரியல் போகிறது. மேலும் இந்த சீரியல் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற  ஒன்றாகும்.

இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி பாக்கியா மற்றும் அவரின் முன்னாள் காதலி ராதிகா உடன் சேர்த்து ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனமாடி உள்ளார். அந்த வீடியோவை பாக்கியா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here