கொரோனா வைரஸிற்கு 100 வருட பழமையான காசநோய் மருந்து – ஆஸ்திரேலியா ஆய்வு பலன் கொடுக்குமா..?

0

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு 100 ஆண்டுகள் பழமையான காசநோய் தடுப்பு மருந்தை கொடுத்து சோதிக்கலாம் என்று பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவித்து உள்ளதால் அதற்கான சோதனையில் ஆஸ்திரேலியா இறங்கி உள்ளது.

மருந்து பரிசோதனை:

ஆஸ்திரேலியா தற்போது Bacillus Calmette–Guerin (BCG) என்ற தடுப்பு மருந்தை 4000 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொடுத்து, இது கொரோனாவை தடுக்குமா என்று பரிசோதிக்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் முர்டோச் குழந்தைகள் நல மருத்துவமனை இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளது.

சர்வதேச நாடுகள் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்த சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.

100 ஆண்டு பழமையான மருந்து..!

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேல் காசநோய்க்கு Bacillus Calmette–Guerin (BCG) என்ற தடுப்பு மருந்து உலகம் முழுவதும் 130 மில்லியன் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப்படுகிறது. இந்த மருந்து ஆரம்ப நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கிருமிகளை எதிர்கொள்ள வலுவுடன் செயல்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here