சிவப்பு சேலையில் சிக்குன்னு காட்சியளிக்கும் அதுல்யா ரவி – வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!

0

தற்போது தமிழ் திரையுலகில் உள்ள நடிகைகள் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் கவர்ச்சிகரமாக போட்டோஷூட் செய்து புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைத்து லேசான ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுல்யா ரவி. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காதல் கண் கட்டுதே படமும் மக்களிடையே பிரபலமானது. தன் முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கும், அழகிற்கும் தமிழ் திரையுலகில் அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

athulya ravi
athulya ravi

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. லாக்டவுன் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். மேலும் அவரது சமையல் கலைகள், தம்பியிடம் சண்டையிடுவது என வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

athulya ravi
athulya ravi

காதல் கண் கட்டுதே படத்திற்கு பிறகு ஏமாளி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் பெரிய அளவிற்கு வெற்றியை தரவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற திரைப்படங்கள் அவரின் நடிப்பை அங்கீகரித்தது.

athulya-ravi
athulya-ravi

இவரின் நடிப்பு திறமையால் குறைவான எண்ணிக்கையில் படங்கள் நடித்திருந்தாலும் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழ் மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். லாக்டவுன் சமயத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த அதுல்யா தற்போது உடல் எடையை குறைத்து சிவப்பு சேலையில் தேவதை போல காட்சியளிக்கிறார்.

athulya-ravi
athulya-ravi

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதுல்யா நடிப்பில் சபாரி, காடவர் இந்த இரண்டு திரைப்படங்கள் வெளியீடுக்காக காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here