ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் தங்க விலை உயரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை:

தொழில்துறையில் பல ஈடு செய்ய முடியாத இழப்புகளை கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. தங்க விலை ஏற்றத்திற்கும் இதுதான் முக்கிய காரணம். பங்குச்சந்தைகள் சரிய, சரிய தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து கொண்டே சென்றது. இதன் விளைவாக அதன் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா பரவல் முடிந்து பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய பின்னரே தங்க விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

gold-purchase
gold-purchase

இதனால் நடுத்தர மக்களின் தங்க நகை கனவு வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என சோகத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வந்தது. ஏறிய அளவிற்கு இறங்கவில்லை என்றாலும் சிறிதளவு குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் பொருட்கள் விநியோகம் – தமிழக அரசு முடிவு!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.23 உயர்ந்து ரூ.4,853க்கும், ஒரு சவரன் 184 ரூபாய் அதிகரித்து ரூ.38,824க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து ஒரு கிராம் ரூ.65.60 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here