இதெல்லாம் ரொம்ப தப்பு மா.. முன்னணி நாயகிகள் பயப்படும் அளவிற்கு அதிதி சங்கர் செய்த காரியம்!

0
இதெல்லாம் ரொம்ப தப்பு மா.. முன்னணி நாயகிகள் பயப்படும் அளவிற்கு அதிதி சங்கர் செய்த காரியம்!

நாயகி அதிதி சங்கர் தற்போது வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவு பிற கோலிவுட் நாயகிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிதி சங்கர்:

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை அதிதி சங்கர். இவர் பான் இந்தியா இயக்குனரான ஷங்கரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவரின் விருமன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால் அப்படம் வெளியாகும் முன்னரே அதிதி தனது இரண்டாம் படமான மாவீரன் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் மிஸ்கின், சரிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் மாவீரன் படத்தில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படப்பிடிப்பு தளத்தில் இருந்து அதிதி வெளியிட்டுள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. விருமன் படம் பிரபலமடைந்தது போலவே இப்படமும் பிரபலமடைய வேண்டும் என அதிதி சங்கருக்கு தங்கள் வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிதியின் விருமன் படம் சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியானது. டாப் நாயகிகள் கூட சிறிது இடைவெளி விட்டு தான் அடுத்த படத்தில் புக் ஆவார்கள். ஆனால் அதிதியோ அடுத்த படத்தின் படப்பிடிப்பையே தொடங்கிவிட்டார். இவரின் வேகம் கோலிவுட்டின் மற்ற நாயகிகளுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here