திருக்கார்த்திகை நாளன்று 27 தீபங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும்?? முழு விளக்கம் இதோ!!

0

கார்த்திகை திருநாளில் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்? எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும்? என்பதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம். கார்த்திகை திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம், இரண்டாம் நாள் கார்த்திகை தீபம் என்று மூன்றாம் நாளும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கார்த்திகை மாதம் விளக்கிடும் மாதம் என்று அழைக்கப்படுகிறது.

கார்த்திகை தீபம்:

இந்த மாதம் வரக்கூடிய சோம வாரங்கள் அதாவது திங்கள் கிழமை சிவனுக்கு உரிய நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் ஐந்து திங்கட்கிழமை வருகிறது. மேலும், கார்த்திகை திருநாள், பௌர்ணமியோடு சேர்ந்து வருவதால் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் சிவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதனால்தான் திருவண்ணாமலையில் கார்த்திகை சிறப்பாக கொண்டப்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிவனுக்கு பிடித்த நெவேத்தியம் படைத்து பூஜை முறைகளை வழிபட்டால் சிவனின் முழு அருளை பெற முடியும் என்று கூறப்படுகிறது. நெல் பொரியை சுத்தமான வெல்ல பாகில் கலந்து சிவனுக்கு படைக்க வேண்டும். கார்த்திகை திருநாள் அன்று வீடுகளை சுத்தம் செய்து பூஜை அறை, நிலவாசல், படிக்கட்டு, முற்றம், சமையலறை, வாசல் போன்ற இடங்களில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாசலில் பச்சை அரிசி கோலம் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து குத்துவிளக்கு வைத்து வழிபட்டால் வீட்டில் மஹாலஷ்மி குடியிருப்பாள். ஒற்றை எண் அடிப்படையில் விளக்கு ஏற்ற வேண்டும். முதல் நாள் 27, இரண்டாம் நாள் 11, மூன்றாம் நாள் 5 என்ற வீதத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு சுத்தமான நெய் அல்லது நல்ல எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

கார்த்திகை திருநாளன்று எந்த எந்த இடங்களில் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

  • முற்றத்தில் – 4
  • சமையல் அறையில் – 1
  • நடையில் – 2
  • பின் கட்டில் – 4
  • திண்ணையில் – 4
  • மாடக் குழியில் – 2
  • வெளிப்புறத்தில் – 1
  • கோலத்தில் – 5
  • சாமீ படத்திற்கு – 2
  • நிலவாசலில் – 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here