#SLVSIND மேட்சில் படுதோல்வி அடைந்த இந்தியா –  ஹாட்ரிக் அடித்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா!!

0
#SLVSIND மேட்சில் படுதோல்வி அடைந்த இந்தியா -  ஹாட்ரிக் அடித்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா!!
#SLVSIND மேட்சில் படுதோல்வி அடைந்த இந்தியா -  ஹாட்ரிக் அடித்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா!!

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்ததன் மூலம் நான்கு சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.

அதிரடி காட்டிய கேப்டன்!

நடப்பு 15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அனைத்து அணிகளும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அணி கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் மோசமாக சொதப்பி வருகிறது. அதாவது நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் இந்திய அணி தற்போது வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித் சர்மா 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் நான்கு முக்கிய சாதனைகளை புரிந்துள்ளார். அதாவது ஆசிய கோப்பை வரலாற்றிலேயே 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

இவருக்கு அடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் தனது 32 வது அரை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ரோஹித் சர்மா ஆசிய கோப்பையில் அதிக அரைசதம் அடித்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற நான்கு மிக முக்கியமான சாதனைகளை நேற்றைய ஆட்டத்தின் மூலம் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here