‘நான் அவருக்கு 4வது தாரமா வாக்கப்பட்டேன்.., என்ன ஏமாத்திட்டாங்க’ – கதறும் 90ஸ் நடிகை!!

0

பிரபல குணச்சித்திர நடிகை அஞ்சு பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கா இந்த நிலைமை?? என்று அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.

நடிகை அஞ்சு:

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காலப்போக்கில் முக்கிய வேடங்களிலும் நடித்து அசத்தியவர் தான் பேபி அஞ்சு . மேலும் 1988 ஆம் ஆண்டில் வெளியான ருக்மிணி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கன்னட படங்களில் பிரபலமான டைகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஞ்சு உறவினர்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த திருமணம் நடந்தேறியது. இந்த நிலையில் தனது வாழ்க்கை குறித்து குறித்து நடிகை அஞ்சு யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

ஐயயோ.., குழந்தை பிறந்ததும் மொத்தமா மாறிட்டிங்களே நமிதா.., லேட்டஸ்ட் கிளிக்ஸ்  வைரல்!!

அதில் அவர் கூறியதாவது, என்னை விட 31 வயது மூத்தவரான டைகர் பிரபாகரனை விரும்பி கட்டிகொண்டேன். அப்போது எனக்கு தெரியவில்லை அவர் 3 திருமணங்கள் முடித்தவர் என்று. மேலும் அவரது பிள்ளைகள் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். இருப்பினும் அவருடன் ஒரு வருடத்திற்கு மேலாக வாழ்ந்தேன்.

இதனை தொடர்ந்து நான் அவருடன் வாழ்ந்து வந்த பொழுதும் வேறு ஒரு பெண்ணோடு பழக்கத்தில் இருந்து வந்ததால் மனம் தாங்காமல் அவரை விவாகரத்து செய்துவிட்டேன். தற்போது வரை படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் டைகர் பிரபாகரன் தனது 51வது வயதில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பேமஸாக நடித்த மஞ்சுவுக்கு இப்படி நிலைமையா?? என்று ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here