பணத்தை தவறாக வேறு ஒருவர் வங்கி கணக்கில் போட்டீங்களா? உடனே இதை செஞ்சா பணம் உங்கள் கையில்!!

0
பணத்தை தவறாக வேறு ஒருவர் வங்கி கணக்கில் போட்டீங்களா? உடனே இதை செஞ்சா பணம் உங்கள் கையில்!!

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், வேறொருவரின் கணக்கில் பணத்தை மாற்றி அனுப்பி விட்டால், அந்தத் தொகையை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

பணத்தை திரும்ப பெறுதல்:

வளர்ந்து வரும் நவீன யுகத்தில், வங்கிக்கு செல்லாமல் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை முறையில் நமக்கு தேவையானவரின் வங்கி கணக்கில் செலுத்தலாம். இப்படி பணத்தை செலுத்தும் பொழுது, ஏதேனும் தவறு நடந்து வேறொருவர் வங்கி கணக்கிற்கு பணத்தை தவறாக அனுப்பி விட்டால் அதை எவ்வாறு சட்டப்படி மீட்கலாம் என்பதை கீழே பாருங்கள்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

  • பணம் தவறாக அனுப்பப்பட்டது தெரிந்தவுடன்  உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். பின் வாடிக்கையாளர் உதவி எண்ணுக்கு கால் செய்து முழு விவரத்தையும் சொல்லி, தவறுதலாக பணம்  அனுப்பப்பட்ட வங்கி கணக்கையும் குறிப்பிட வேண்டும்.
  • அப்படிப்பட்ட வங்கி கணக்கு இல்லை என்றால், உங்கள் தொகை உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் தவறாக அனுப்பிய எண்ணில், ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி அவரிடம் இருந்து பணத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இந்த பணம் உங்கள் கைக்கு வர 2 மாதங்கள் வரை ஆகலாம்.
  • சம்பந்தப்பட்ட நபர் பணத்தை திருப்பி தர மறுத்தால் நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பணம் அனுப்பும் முன்  சம்பந்தப்பட்டவர் அனைத்து விவரங்களையும் சரி பார்ப்பது அவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
  • பணத்தை வேறொரு நபரின் கணக்கில் வங்கி டெபாசிட் செய்து விட்டால், அந்தப் பணத்தை தவறான வங்கிக் கணக்கில் இருந்து சரியான கணக்கிற்கு திருப்பி செலுத்துவது முழுக்க முழுக்க வங்கியின் பொறுப்பு.
  • ஒரு பரிவர்த்தனையில் நடக்கும் தவறுகளில், பயனாளி அனுமதி இல்லாமல் வங்கி அதை மாற்ற முடியாது. அதை களைவதற்கான வழிகளை மட்டுமே வழங்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here