IND VS AFG இன்று மோதல்.., இந்திய ரசிகர்களின் கோபம் குறையுமா.., ரோஹித் அணியை வெற்றி அடைய செய்வாரா?

0
IND VS AFG இன்று மோதல்.., இந்திய ரசிகர்களின் கோபம் குறையுமா.., ரோஹித் சர்மா அணியை வெற்றி அடைய செய்வாரா?
IND VS AFG இன்று மோதல்.., இந்திய ரசிகர்களின் கோபம் குறையுமா.., ரோஹித் சர்மா அணியை வெற்றி அடைய செய்வாரா?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது.

இந்தியா செய்யப்போவது என்ன?

ஆசிய கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. இதனை தொடர்ந்து தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி இன்று இந்தியாவை சந்திக்கிறது. இந்திய அணி இதற்கு முன்னர் தொடர்ச்சியாக இரண்டு முறை தோல்விகளை சந்தித்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கூட இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி இந்த ஆண்டு பட்டத்தை வெல்ல தவறிவிட்டது. ஒருவேளை இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மூன்றாம் இடம் பிடிக்க கூட வாய்ப்புள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பந்து வீச்சாளர்களின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்தது. ஆனால் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஆடினாலும் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவால் காத்துள்ளது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி அணியில் பேட்ஸ்மேன்கள் யாரும் நல்ல பார்மில் இல்லை.

ஆனால் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுகின்றன. மேலும் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களை சமாளிப்பார்களா என பார்க்கலாம்.இந்த இரு அணிகளும் இதற்கு முன்னாடி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி தான் தொடரை வென்றுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்களா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here