ஷிவாங்கி&அஸ்வின் காம்போவில் ஆல்பம் சாங் – படுகுஷியில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின் தற்போது மீண்டும் ஒரு ஆல்பம் சாங்கில் நடிக்க உள்ளார். அதுவும் மக்களுக்கு பிடித்தமான ஒருவரின் காம்போவுடன் வரவுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அஸ்வின் ஆல்பம் சாங்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எனெனில் இதில் கலந்துக்கொண்ட அனைவருமே டாப் மோஸ்ட் தான். குக்குகள் அனைவரும் தற்போது கலக்கிக்கொண்டு வருகின்றனர். கோமாளிகள் பற்றி சொல்லவே வேண்டாம். வேற லெவெலில் பிரபலம் அடைந்து வருகின்றனர்.

ஷிவாங்கி, பாலா, புகழ், மணிமேகலை தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே. ஒன்றுமே தெரியாமல் அவர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லவே வேண்டாம். மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் மனக்கவலையை போக்கி வருகின்றனர். எப்பொழுது சனி,ஞாயறு வரும் என்று காத்துக்கொண்டிருந்தனர். அப்படி இருக்க இப்பொழுது இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

எப்பொழுது அடுத்த சீசன் என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்த சீசனில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டது அஸ்வின் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவருக்கு 1 மில்லியன் சப்ஸ்கரைபர்ஸ். இப்பொழுது அவருக்கு பல படவாய்ப்புகள் கிடைத்துள்ளது.

புகழுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு ஆல்பம் சாங் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதுவும் ஷிவாங்கி பாடியுள்ளார். இது பலருக்கும் பெரிய சர்ப்ரைஸ் தான். இதனை கேட்ட ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here