
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், அஸ்வின் மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துவர்கள் பட்டியலில் இணைந்தார்.
IND vs AUS:
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபி 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை விளையாடியது. நேற்று தொடங்கிய இந்த போட்டியின் முடிவில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த, ஆஸ்திரேலிய அணி 255 ரன்களை குவித்திருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
2ம் நாளான இன்று நடைபெற்று வரும் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் கிரீனை (114) அஸ்வின் தனது சுழலில் சிக்க வைத்து விக்கெட் எடுத்தார். அதே ஓவரில், அஸ்வின் அலெக்ஸ் கேரியை டக் அவுட்டாகினார். மேலும், முன்னணி வீரரான மிட்செல் ஸ்டார்க்கையும் (6) வீழ்த்தி அஸ்வின் அசத்தினார்.
“HALLA BOL” ஐபிஎல் தொடருக்காக பாட்டை வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!
இதனை தொடர்ந்து, அஸ்வின் நாதன் லியோன் (34) மற்றும் டாட் மர்பி (41) என அஸ்வின் சுழலில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம், பார்டர் கவாஸ்கர் டிராபியில் 111 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே சாதனை அஸ்வின் முறியடித்துள்ளார். இதுவரை 113 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள அஸ்வின் பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.