“HALLA BOL” ஐபிஎல் தொடருக்காக பாட்டை வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

0
"HALLA BOL" ஐபிஎல் தொடருக்காக பாட்டை வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

ஐபிஎல் தொடரை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, எதிர்வரும் சீசனுக்காக பாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடருக்காக, ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியும், தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்த ஏலத்தின் மூலம், அனைத்து அணிகளும் தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

எதிர்வரும் சீசனுக்காக ஒவ்வொரு அணியும் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி வரும் இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சற்று வித்தியாசமாக, பாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலானது, ராஜஸ்தான் ரசிகர்கள் முன்னிலையில், HALLA BOL தலைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுகப்படுத்தி உள்ளது.

IPL 2023: விற்பனைக்கு வந்த டிக்கெட்டுகள்…, CSK vs GT போட்டிக்கான விலை 800 லிருந்து ஆரம்பம்!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, ஐபிஎல்லின் முதல் சீசனில் பட்டம் வென்ற அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் வீழ்ந்து 2வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிரணிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here