காமெடியனா ச்சா., ச்சா.., ஒன்லி ஹீரோ.., மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி.. மாஸாக வெளியான டைட்டில் போஸ்டர்!!

0
காமெடியனா ச்சா., ச்சா.., ஒன்லி ஹீரோ.., மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி.. மாஸாக வெளியான டைட்டில் போஸ்டர்!!
காமெடியனா ச்சா., ச்சா.., ஒன்லி ஹீரோ.., மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி.. மாஸாக வெளியான டைட்டில் போஸ்டர்!!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பரோட்டா சூரி ஹீரோவாக நடிக்கும் புது படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பரோட்டா சூரி

தென்னிந்திய தமிழ் சினிமாவில் குட்டி குட்டி கேரக்டரில் நடித்து தற்போது காமெடியில் பின்னி பெடலெடுத்து வருபவர் தான் நடிகர் சூரி. தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரான வெற்றிமாறன் படைப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கண்டிப்பாக சூரியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த அளவிற்கு படம் முழுக்க சூரியை வேறு ஒரு பாணியில் காமித்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்தின் அடுத்த பார்ட் பணிகள் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு பிறகு தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜைகள் போடப்பட்டது.

என்ன நடந்தாலும் அந்த பாரதி இந்த வெண்பாக்கு தான்.., கண்ணம்மா திட்டத்துக்கு ஆட்டம் காட்ட மீண்டும் BK 2 வில் என்ட்ரி!!

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது “கூழாங்கல்” பட புகழ் பி எஸ் வினோத் ராஜ் இயக்கும் இப்படத்திற்கு “கொட்டுக்காளி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பல சேவல்கள் கூட்டமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையை சுற்றி ஷூட்டிங் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here