ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் ஆர்யன் – ஜோடியாகும் முக்கிய பிரபலம்! வெளியான அதிரடி அப்டேட்!!

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் பாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்யன், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

களமிறங்கும் ஆர்யன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடரில், செழியன் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் ஆர்யன். இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக விகாஷ் சம்பத் என்பவர் தற்போது நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, நடிகர் ஆர்யன் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் நாயகனாக நடிப்பதாகவும், இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியலின் கன்னட வெர்சனில் நடித்து வரும் மோக்ஷிதா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சுபத்ரா நடிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. முதன்முதலாக நடிகர் ஆர்யன் மெயின் ரோலில் நடிக்க இருப்பதால்,  இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here