எளிமையான முறையில் திருமணத்தை முடித்த ”அருவி” திரைப்பட இயக்குனர் – ரசிகர்கள் வாழ்த்து!!

0

அருவி என்னும் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் தற்போது டீனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அருண் பிரபு புருஷோத்தமன்

அருவி என்னும் திரைப்படத்தின் மூலமாக உலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். 2017ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் சமூக-அரசியல் கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலமாக அருவி என்கிற பெண்ணின் வாழ்க்கையில் நடந்த கடும் வேதனையை அழகாக எடுத்து காட்டியுள்ளார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வாழ் என்னும் திரைப்படத்தினையும் அருண் பிரபு இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே பிரபலமான இவர் நேற்று டீனா என்கிற பெண்ணை எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. பல திரை பிரபலங்களும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here