ICU வில் இருக்கும் பாடகி லதா மங்கேஷ்கர் பற்றி பரவும் வதந்தி – யாரும் நம்ப வேண்டாம், வேண்டுகோள் விடுத்த உதவியாளர்!!

0

பல நாட்களாகவே ICU விலேயே இருந்து வரும் லதா மங்கேஷ்கர் குறித்து எந்த விதமான வதந்தியையும் பரப்ப வேண்டாம் என அவரது உதவியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது உடல் நிலை தேற பிராத்தனை செய்யுங்கள் எனவும் கூறியுள்ளார்.

லதா மங்கேஷ்கர்

இந்தியாவின் இசைக்குயில் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் பாடகி லதா மங்கேஷ்கர். நான்கு வயதில் பாட ஆரம்பித்த இவர் இன்னும் பல பாடல்களை தொடர்ந்து பாடி கொண்டு தான் இருக்கிறார். இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். கடந்த 9ம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமலே இருந்து வருகிறது.

உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே சென்றதால் ICU வில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மருத்துவர்கள் உடல் நிலை சிறிது சிறிதாக தேறிக்கொண்டு வருவதாக அறிவித்தார்கள். பல சமூக ஊடகங்கழும் இவரது உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி வருகிறது. இதனால் ஆத்திரமான அவரது உதவியாளர் யாரும் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம், அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வர பிராத்தனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here