அர்ஷ்தீப்-பின் மிரட்டல் பவுலிங் – நிலை குலைந்த தென்னாபிரிக்க டீம்! வெற்றி மாலை சூடிய இந்தியா!!

0
அர்ஷ்தீப்-பின் மிரட்டல் பவுலிங் - நிலை குலைந்த தென்னாபிரிக்க டீம்! வெற்றி மாலை சூடிய இந்தியா!!
அர்ஷ்தீப்-பின் மிரட்டல் பவுலிங் - நிலை குலைந்த தென்னாபிரிக்க டீம்! வெற்றி மாலை சூடிய இந்தியா!!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

அர்ஷ்தீப் சிங்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலே இந்திய வீரர் அர்ஷ்தீப்-பின் மிரட்டலான பவுலிங்கால் எதிரணி வீரர்கள் நிலை குலைந்தனர். மேலும் இந்த அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற தென்னாப்பிரிக்கா வீரர்களின் கனவு சுக்குநூறாக போனது. முதல் போட்டியிலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடரின் முன்னிலையில் உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Participant Of The Fit Arshdeep Singh | Info4Now

மேலும் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதுக்கு அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவிற்கு அவரின் ஆட்டம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் வெறும் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் தான் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது.

ICC தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபரையே பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் அசத்தல்.., அப்போ முதலிடம் யாருக்கு??

மேலும் தனது இளம் வயதிலே அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தும் மாயாஜால பந்து வீச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதே போன்று அவர் இனி வரும் போட்டிகளில் விளையாடினால் இந்திய அணியில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுப்பார். மேலும் வளர்ந்து வரும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் வீரராக அர்ஷ்தீப் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here