திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய உரிமை – சட்டப்படி செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

0
திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய உரிமை - சட்டப்படி செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

நாட்டில் பெண்களுக்கான சட்டவிரோத கருக்கலைப்பு, குறித்த முக்கிய கருத்து ஒன்றை இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் கருத்து:

நாட்டில், பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு பல்வேறு வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி, சட்டவிரோதமாக ஒரு சிலர் பணத்தை கொடுத்து இந்த கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சட்டவிரோத கருக்கலைப்பு நடந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அதை செய்த மருத்துவருக்கும் கடுமையான தண்டனை உண்டு என்ற நடைமுறை இதுவரை இருந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் இந்த கருக்கலைப்பு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம், அவர்களுக்கு அதற்கான முழு உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

பாரினுக்கு பறந்த விஜய் டிவி பிரபலம் – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்! போட்டோ வைரல் உள்ளே!!

பாதுகாப்பற்ற முறையில், நடக்கும் கருக்கலைப்பு முறைகளை மட்டுமே அரசு எதிர்ப்பதாகவும், திருமணம் செய்து கொண்டவர்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்ற தற்போதைய நிலையை மாற்றி அமைப்பது மிகவும் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இது குறித்த கருத்துக்கள், தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here