அரசு ஊழியர்களுக்கு ஆப்பு..,,இனி இதற்கு அனுமதி கிடையாது..,அதிரடி உத்தரவு!!

0
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு..,,இனி இதற்கு அனுமதி கிடையாது..,அதிரடி உத்தரவு!!

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதி கிடையாது என இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடை உத்தரவு;

வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில், இலங்கை அரசு மூழ்கி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த வகையில் அவர்கள் பெரும் போராட்டங்களை கையில் எடுத்து, தாக்குதல்களையும் நடத்தினர். இதன் காரணமாக அதிபர் மாற்றமும் இலங்கையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சில நாட்களாக ஓய்ந்திருந்த போராட்டம் தற்போது இலங்கையில் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது மாணவ அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் உணவு பற்றாக்குறையால் மக்கள் பட்டினியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாரினுக்கு பறந்த விஜய் டிவி பிரபலம் – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்! போட்டோ வைரல் உள்ளே!!

அதாவது உணவு இல்லாத காரணத்தால், பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் ஒரு பொது அதிகாரி இணையங்களில் கருத்துக்களை ஷேர் செய்வது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here