அரியர் தேர்ச்சியில் AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப்பருவம் தவிர்த்து பிற பருவ தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் பல ஆண்டுகளாக அரியர் வைத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் உற்சாகமடைந்தனர். மறுபுறம் கல்வியாளர்களுக்கு இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சி அளித்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Anna univ
Anna univ

தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விளக்கம் அளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்கிற முடிவு யுஜிசி விதிமுறைகளுக்கு புறம்பானது என தெரிவித்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்ப்பது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

‘அதிமுக கிளைச் செயலாளர் முதல் முதல்வர் அரியணை வரை’ – எடப்பாடி பழனிசாமியின் வெற்றிப்பயணம்!!

மேலும் அரியர் தேர்ச்சி விவகாரத்தில் AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது என கூறிய நீதிபதி, இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க நவம்பர் 20 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே ஆன்லைன் உணவு டெலிவரி பணிகளில் இன்ஜினியரிங் படித்தவர்களே அதிகம் பணியாற்றுவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.  மேலும் அரியர் தேர்வுகள் ரத்திற்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்களின் கல்வி விபரங்களும் கேட்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here