எப்படி இருக்கிறது ஏஆர் ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைப்படம்?? ஒரு பார்வை!!

0

“இசை புயல்” ஏஆர் ரகுமான் தயாரித்த முதல் திரைப்படமான “99 சாங்ஸ்” திரைப்படம் இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகியது. இதனை அடுத்து அந்த திரைப்படம் குறித்த விமர்சனங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

99 சாங்ஸ் திரைப்படம்

தமிழ் மட்டும் அல்லாமல் உலக மொழிகளில் இசை மூலமாக கலக்கி வருபவர் தான் “இசை புயல்” ஏஆர் ரகுமான். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இசை துறையில் அறிமுகமாகி பல தடைகளை தாண்டி இன்று மிக பெரிய இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். தனது ஒப்பற்ற இசைக்காக இவருக்கு 2 ஆஸ்க்கார் விருதுகள் கிடைத்துள்ளது. இப்படியாக இருக்க, தனது சொந்த கதையை மையமாக வைத்தே ஒரு படத்தினை இவர் தயாரித்தார். அந்த திரைப்படம் தான் “99 சாங்ஸ்” இந்த திரைப்படத்தில் ஹிந்தி நடிகர் இஷான் பாட் நடித்துள்ளார்.

அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் தான் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள், சக இசை அமைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என்று பலர் பங்கேற்றனர். இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்தது என்றே கூறலாம். இப்படியாக இருக்க, இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியது. இந்த திரைப்படம் குறித்து அனைவரும் கூறும் போது ஒரு இசை கலைஞன் தனது வாழ்நாளில் எது போன்ற பிரச்சனைகள் மற்றும் சவால்களை தனது வாழ்வில் சந்திக்கிறான் என்பதனை அழகாக எடுத்து காட்டி உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த திரைப்படத்தில் காது மற்றும் வாய் பேச முடியாத நாயகனுக்கு நாயகியின் தந்தை ஒரு சவாலை முன் வைக்கிறார். உலகில் யாருமே இதுவரை கேட்காத இசையினை அமைக்க வேண்டும் என்பது தான். நாயகன் இசையினை அமைத்து தனது காதலில் வெற்றி அடைந்தானா?? என்பதே மீதி கதை. தனது முதல் படத்திலேயே இஷான் பாட் தனது நளினமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். ரஹ்மானின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல விருந்தாக தான் இருக்கும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here