நடராஜனுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

இந்திய அணியின் நட்சத்திர நாயகனாக தற்போது திகழ்ந்து வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தற்போது பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை.

நடராஜன்

சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் மூலம் அறிமுகமானார் தமிழகத்தின் நடராஜன். இவர் தனது வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலே தனது கால் தடத்தை பதித்தார். தனது வேகம் மற்றும் பவுன்சரால் ஆஸ்திரேலிய அணியினரை மிரள வைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்பு உலகத்தின் பார்வையே இவரது பக்கம் திரும்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிசிசிஐ ஆண்டு தோறும் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வருவது வழக்கம். அதில் மொத்தம் ஏ+, ஏ, பி, சி என மொத்தம் நான்கு பிரிவுகள் இருக்கும். தற்போது நடப்பாண்டிற்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்த பட்டியல் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையில் இருப்பதாகும்.

எப்படி இருக்கிறது ஏஆர் ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைப்படம்?? ஒரு பார்வை!!

தற்போது இந்த பட்டியலில் இந்திய அணியின் முக்கிய வீரரான நடராஜனின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் நடராஜன் மிக முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிசிசிஐ செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதேபோல் இஷான் கிஷன், ராகுல் சாகர் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்றவர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேடு பட்டியல்:

ஏ+ (சம்பளம் 7 கோடி): விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ராஹ்.
ஏ (சம்பளம் 5 கோடி): அஸ்வின், ஜடேஜா, புஜாரா, தவான், ரஹானே, ஷமி, இஷாந்த், கே.எல்.ராகுல், ரிஷாப் பாண்ட், ஹர்டிக்.
பி (சம்பளம் 3 கோடி):  சஹா, புவனேஷ்வர், தாகூர், உமேஷ் யாதவ், மயங்க் அகர்வால்.
சி (சம்பளம் 1கோடி): சைனி, தீபக் சஹர், குலதீப், அக்சர் படேல், ஷ்ரேயஸ் ஐயர், விஹாரி, ஷுப்மங் கில், வாஷிங்க்டன் சுந்தர், சஹால், சிராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here