‘பொருளாதாரத்தை சீரமைக்க அனைத்து பணிகளும் நடைபெறுகிறது’ – மத்திய அமைச்சர் பேட்டி!!

0

இந்திய பொருளாதாரம் சீரமைப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திமுக நாடாளுமன்ற தலைவர் கேள்வி எழுப்பினார். தற்போது இதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம்

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தொழில்கள் எதுவும் நடைபெறாத நிலையில் பங்குசந்தையும் வரலாறு காணாத வகையில் பெரிய அளவில் சரிந்தது. இந்நிலையில் தற்போது சில மாதங்களாக கொரோனா தாக்கம் குறைந்து அனைத்து தரப்பு தொழில்களும் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பொருளாதாரமும் தற்போது சரிவில் இருந்து மீள தொடங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் பணிகளும் தற்போது தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய பொருளாதாரம் சீரமைப்பு குறித்து திமுக நாடாளுமன்ற தலைவர் டி .ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது யார்?? வைரலாகும் கருத்துக்கணிப்பு!!

தற்போது இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க சுமார் ரூ.27 லட்ச கோடி அளவில் ரிசர்வ் வங்கி திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here