‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் மகளுடன் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்!!

0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் குறித்த அப்டேட்டை ரஜினியின் பிறந்தநாள் அன்று அப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா வெளியிட்டார். இதன் படப்பிடிப்பு நாளை தொடவுள்ள நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாடில் ரஜினி தன மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த படம்:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.ரஜினியின் 45 வருட கால சினிமா வாழ்க்கையில் 167 படங்களை நடித்துள்ளார் தற்போது இது 168-வது படம் “அண்ணாத்த”, சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிக்கு டிசம்பர் 15- தேதி தொடங்க உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் சிவா ரஜினியின் பிறந்தநாள் அகன்று வெளியிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இயக்குனர் சிவா அஜித் நடித்த விசுவாசம் படத்தை இயக்கியவர். விசுவாசம் படத்தின் வெற்றியின் காரணமாக இயக்குனர் சிவாவிற்கு தன் அடுத்த பட வாய்ப்பை கொடுத்தார் நடிகர் ரஜினி. ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா,சூரி,கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதிஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 நடிகர், நடிகையர் பட்டியல் – அஜித் & நயன்தாரா “மிஸ்ஸிங்”!!

கொரோனா ஊரடங்கு காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதற்காக ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் சென்ற ரஜினிக்கு விமான நிலையத்தில் பணிபுரிவோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் அண்ணாத்த பட கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here