கல்விக்கட்டணம் செலுத்த அக்.29ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0
Anna University
Anna University

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 29ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மாணவர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை:

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பயின்று வருகின்றனர். மேலும் அக்டோபர் 15 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பை காரணம் காட்டி மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Anna univ
Anna univ

இதனால் தவணை முறையில் கல்விக்கட்டணத்தை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முழு கல்விக்கட்டணத்தையும் செலுத்த மாணவர்களை நிர்பந்திப்பதாகவும், குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அவர்களின் பெயர் கல்லூரியில் இருந்து நீக்கப்படும் என எச்சரிப்பதாகவும் மாணவர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கல்லூரி திறக்கப்படாத நிலையில் ஆய்வக கட்டணத்தை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிக்கை!!

இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அண்ணா பல்கலை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அக்டோபர் 29ம் தேதி கல்விக்கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here