பிக் பாஸிற்கு பிறகு விஜய் டிவியில் களமிறங்கும் அனிதா சம்பத் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். தற்போது விஜய் டிவியின் மற்றோரு பிரபலமான நிகழ்ச்சியில் சக பிக்பாஸ் போட்டியாளருடன் பங்குபெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனிதா சம்பத்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் சமூகவலைதளத்தில் வெளியான மீம்ஸ் மூலம் மக்கள் மத்தியில் ஒரே நாளில் பிரபலமானார். நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ படம் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் இவர் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், இவர் செய்த சிறிய சிறிய செயல்களும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. அதனால் நிகழ்ச்சியின் பாதியிலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் அனிதா. அவர் வீடு திரும்பிய சில நாளிலேயே எதிர்பாராத விதமாக அவரது தந்தை மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66 இல் விஜயுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்குபெற்ற அவர் விஜய் டிவியின் மற்றோரு நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து நடந்து முடிந்த ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளார். ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் அர்ச்சனா, சோம், ஷிவானி, கேபிரியல்லா, சுரேஷ் ஆகிய மற்ற பிக்பாஸ் நட்சத்திரங்களும் பங்குபெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here