சிறைவாசம் முடிந்து வீடு திரும்பிய சசிகலா – தொண்டர்கள் ஆரவார வரவேற்பு!!

0

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று 4 ஆண்டுகால சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையாகியுள்ள சசிகலா நீண்ட நேர பயணத்திற்கு பிறகு பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தார். வழி நெடுகிலும் தொண்டர்களின் ஆரவார வரவேற்பை பெற்றுக்கொண்ட அவர்  தற்போது ஹபிபுல்லா சாலையிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார்.

முடிந்தது சிறைவாசம்:

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ராஹாரா சிறையில் தனது 4 ஆண்டுகால சிறைவாசத்தை முடித்துக்கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ளார். ஜனவரி 27ம் தேதி விடுதலையடைந்த பிறகு கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்ற அவர் அதன்பிறகு பெங்களூரூ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவையனைத்தையும் முடித்துக்கொண்ட சசிகலா சுமார் 23 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தடைந்துள்ளார்.

‘தமிழகத்தை கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்’ – பன்னீர் செல்வம் ட்வீட்!!

முன்னதாக வழி நெடுகிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தி குப்பத்தில் அவருக்கு 500 கிலோ எடையில் ஆப்பிள் பழங்களாலான மாலை அணிவிக்கப்பட்டது. ஓசூரிலுள்ள பிரத்யங்கரா தேவி கோவில் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலில் கட்சியின் வண்ணத்துண்டை ஏந்தியபடியே சுவாமி தரிசனம் செய்த சசிகலா இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் காரியமாக ராமவாரத்த்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகியின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி வணங்கினர். பிறகு அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்துவிட்டு ஹபிபுல்லா சாலையிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியாவின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here