காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் மசாலா…! ட்ரை  பண்ணி பாருங்க! மிச்சமே இருக்காது!!!

0

அசைவ பிரியர்களுக்கு அசைவ உணவுகளை எந்த வகையில் கொடுத்தாலும் மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சாப்பிடுவார்கள். மேலும் அந்த உணவு பொருட்கள் கொஞ்சம் காரசாரமான இருந்தால் போதும் நாவில் என்றும் இருக்கும். மேலும் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட தோணும். அப்படிப்பட்ட ஆந்திரா ஸ்டைல் மட்டன் மசாலா எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

மிளகாய் வற்றல் – 4

பச்சை மிளகாய் – 3

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

செய்முறை

நன்றாக சுத்தம் செய்த மட்டன் உடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி கொண்டு 3 மணி நேரம் பிரிட்ஜ்ஜில் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 6 முதல் 7 விசில் வரை விட்டு வேக வைக்க வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும். இதனையடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்க வேண்டும். அதில் வேக வைத்த மட்டன் மற்றும் வேக வைத்த தண்ணீர், கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவேண்டும். அதன் பின்னர் தண்ணீர் வற்றியதும் இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here