ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 10,167 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 68 பேர் பலி..!

0

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,167 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் கொரோனா நிலை..!

ஆந்திராவில் மொத்தம் 1,30,557 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,252 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60,024 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,281 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 68 கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

ENEWZ சமூக வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கிழக்கு கோதாவரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,441 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கோதாவரியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,180ஆக அதிகரித்துள்ளது. மேற்கு கோதாவரியில் கடந்த 24 மணி நேரத்தில் 998 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு கோதாவரியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,354ஆக உயர்ந்துள்ளது.

நாசாவின் ‘ரோவர்’ – செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம்!!

விசாகப்பட்டினத்தில் 1,223 பேரும், அனந்தப்பூரில் 954 பேரும், சித்தூர் 509, குண்டூர் 946, கடப்பா 753, கிருஷ்ணா 271, குர்நூல் 1,252, நெல்லூர் 702, பிரகாசம் 318, ஸ்ரீகாகுளம் 586, விழிணகரம் 214 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இதுவரை 18,90,077 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,30,557 மாதிரிகள் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவோரின் விகிதம் 6.91 சதவீதமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here