Monday, May 13, 2024

லெபனானைப் போன்று சென்னையில் வெடித்து விடுமோ?? – சுங்கத்துறை அதிகாரிகள் அச்சம்!!

Must Read

காடந்தா 6 ஆண்டு காலமாக சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரைட் எங்கே லெபனான் துறைமுகத்தில் நடந்த விபத்து போல் நடந்து விடுமோ என்று சுங்க துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

லெபனான் விபத்து:

நேற்று லெபனான் துறைமுகத்தில் நடத்த அமோனியம் நைட்ரைட் வெடித்தது உலகில் உள்ள அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. வெடிபொருட்கள் தயாரிப்பதற்காக இந்த அமோனியம் நைட்ரைட்யை கடந்த 6 ஆண்டுகாலமாக அதிகாரிகள் பதுக்கிவைத்துள்ளார் .

சீனாவில் புதிய வைரஸ் தொற்றுக்கு 7 பேர் உயிரிழப்பு!!

lebonan blast
lebonan blast

அதனை, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் வைத்துள்ளனர். அதனால், தான் இந்த விபத்து நிகழ்த்த்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் சென்னையிலும் சுங்கத்துறை அதிகாரிகள் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட 750 மெட்ரிக் டன் எடைகொண்ட அமோனியம் நைட்ரைட் சென்னை துறைமுகத்தில் உள்ளது.

ஏன் பறிமுதல்??

கடந்த 2015 ஆம் ஆண்டு, கொரியா நாட்டில் இருந்து கரூரை சேர்ந்த தனியார் நிறுவனம், இந்த 750 மெட்ரிக் டன் கொண்ட அமோனியம் நைட்ரைட்யை இறக்குமதி செய்திருந்தது.

ஆனால், எதற்காக இதனை இறக்குமதி செய்தது என்று சரியாக பதில் அளிக்கவில்லை, அதே போல் அனுமதியும் பெறவில்லை, இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 6 ஆண்டு காலமாக நீதிமன்ற நடவடிக்கை அந்த தனியா நிறுவதின் மீது நடந்து வருகிறது. தற்போது, இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது இந்த அமோனியம் நைட்ரைட் கடந்த 6 ஆண்டு காலமாக உள்ளது, இதன் நிலை என்ன?, இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

chennai port
chennai port

இல்லையென்றால் லெபனானில் நடந்தது போல் நடந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது . அரசு தகுந்த காலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -